MARC காட்சி

Back
திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்
245 : _ _ |a திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில் -
246 : _ _ |a திருச்சாட்டியக்குடி
520 : _ _ |a இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
653 : _ _ |a கோயில், சைவம், சிவபெருமான், சிவன், திருச்சாட்டியக்குடி, நாகப்பட்டினம், வேதபுரீசுவரர் கோயில், கருவூர்தேவர், திருவிசைப்பா, ஒன்பதாம் திருமுறை
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
914 : _ _ |a 10.6747783
915 : _ _ |a 79.71353531
916 : _ _ |a வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்
918 : _ _ |a வேதநாயகி
922 : _ _ |a வன்னி 
923 : _ _ |a வேத தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இத்தலத்தில் சிறப்புடையது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மூலவர் சிவலிங்கத் திருமேனி; அம்பாள், சண்டிகேஸ்வரி
930 : _ _ |a மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது. ஊர் - சாட்டியக்குடி; கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இதுபற்றியே இத்தலத் திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த் தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார். சாட்டியம் (ஜாட்டியம்); வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்பநோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது.
932 : _ _ |a கருவறையில் மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று உயர்ந்த பாணம்; சதுர ஆவுடையார் அமைப்பு. அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. சண்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a கீழ்வேளூர், கச்சனம், திருத்துறைப்பூண்டி
935 : _ _ |a திருவாரூர் கீழ்வேளூரிலிருந்து (கீவ) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மேலும், திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில் வரை பேருந்து செல்லும்.
936 : _ _ |a காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a தேவூர்
938 : _ _ |a திருத்துறைப்பூண்டி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருத்துறைப்பூண்டி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000228
barcode : TVA_TEM_000228
book category : சைவம்
cover images TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0004.jpg :
Primary File :

cg102v010.mp4

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000228/TVA_TEM_000228_திருச்சாட்டியக்குடி_வேதபுரிசுவரர்-கோயில்-0006.jpg